ஒரே குடியும் குடித்தனம் தான் போல .. திருமணத்துக்கு பின் கையில் மது Glass உடன் ஹன்சிகா..!(வீடியோ)

Author: Vignesh
10 August 2023, 1:45 pm

நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.

இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.

hansika - updatenews360

திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், ஹன்சிகா நேற்று தனது 32 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில், ஹன்சிகா பிறந்த நாளை முன்னிட்டு கணவருடன் மது அருந்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

hansika - updatenews360

ஹன்சிகா மது குடிக்கும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட, திருமணம் ஆகிய ஒரு குடும்ப பெண் இப்படியா நடந்துக்கொள்வது என நெட்டிசன்ஸ் பலர் விமர்சித்து தள்ளியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ:

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 304

    0

    0