கல்யாணத்துக்கு அப்புறம் எகிறும் கிளாமர்.. பிகினியில் ஹன்சிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!
Author: Vignesh14 August 2023, 10:30 am
நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.
இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், ஹன்சிகா நடிப்பை தாண்டியும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். தற்போது இவர் பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தான் தெரியுது என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றன.