“இத்தன பேர எப்படி சமாளிக்க முடியும்.” ஹன்சிகாவை நினைத்து வருந்தும் ரசிகர்கள்..!

Author: Rajesh
1 February 2022, 6:32 pm

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ‘ சிறந்த அறிமுக நாயகி ‘ என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’. ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்தார்.

பின்னர் விஜய், சிம்பு, ஆர்யா என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை ‘சின்ன குஷ்பு’ என்று செல்ல பெயருடன்அழைத்தனர்.

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

நடிகை ஹன்ஷிகா அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார். அந்த வகையில் பொம்மைகளை கொஞ்சும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…