உடல் எடை குறைக்க இவ்வளவு கஷ்டப்பட்டாரா ஹன்சிகா? வீடியோ பார்த்து வியந்த ரசிகர்கள்!

Author: Shree
21 October 2023, 8:48 pm

நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.

இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

குண்டாக புஷ் புஷ் அழகாக இருந்த ஹன்சிகா திடீரென ஆள் அடையாளமே தெரியாமல் படு ஒல்லியாக மாறிவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அட நம்ம ஹன்சிகாவா இது? என செம ஷாக் ஆகிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது அவர் தனது உடல் எடையை குறைக்க மிகவும் கடினமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!