நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மும்பையை சேர்ந்த இவர் தமிழுக்கு முன்னாள் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தார் ஹன்சிகா. தமிழில், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ,எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு ,மான் கராத்தே, அரண்மனை, போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பார்க்க பப்ளியாக குண்டாக இருப்பார் ஹன்சிகா. இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. உடம்பினை சற்று குறைத்து ஹிந்தியில் பெப்பி சாங் ஆடி பார்த்தார், இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் உடனடியாக முடிவெடுத்து, உடம்பினை முற்றிலுமாக குறைத்தார்.குறுகிய காலத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ஹன்சிகாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மஹா’. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து ஹன்சிகா நடித்திருந்தார். தற்போது தமிழில் 4 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை விரைவாக நடித்து முடிக்க ஹன்சிகா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனை தயாராகி வருகிறது. ஆடம்பரமாக நடைபெறும் இந்த திருமணத்திற்காக பிம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள பழங்காலத்து அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை தொழிலதிபர் என்றும் அவர் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவர்களது திருமண தேதி இன்னும் வெளியாகவில்லை. இவர் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான ஏற்பாட்டை அவரது குடும்பத்தினர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.