5 வருட காதலை ஜோடியா கொண்டாடும் ராஷ்மிகா – விஜய் தேவர்கொண்டா – ரசிகர்கள் செம ஷாக்!

Author: Shree
16 August 2023, 8:00 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி குறித்து அப்போதே கிசுகிசுக்கள் வெளியானது. அதில் இடம்பெற்ற இன்கேம் காவாலே என்கிற பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. இதனால் இவர்கள் இருவரும் ரகசியமாக காதலி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்படும்.

இந்நிலையில் கீதா கோவிந்தம் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதை ராஷ்மிகா – விஜய் தேவர்கொண்டா ஜோடி கொண்டாடியுள்ளனர். இதனை ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. அதுக்குள்ள 5 வ வருடம் ஆகிவிட்டதா என செம ஷாக் ஆகிவிட்டனர். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்தினாலும் சிலர் எதிர்மறையாக விமர்சித்துள்ளனர். ” ரக்ஷித் ஷெட்டி உன்னை எட்டி உதைத்தும் 5 வருடம் ஆகிவிட்டது” என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஆம், இப்படத்தில் ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா லிப்லாக் காட்சியால் ராஷ்மிக்காவுக்கு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் நடைபெறவிருந்த திருமணம் நின்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!