இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணம் பண்ணுவேன்… முரட்டு Single’க்கு முடிவுகட்டிய பிரேம்ஜி!

Author: Rajesh
2 January 2024, 5:24 pm

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், இதனைத் தொடர்ந்து, சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.

‘என்ன கொடுமை சார் இது? , எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா?’ உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் இவர் பேமஸ். திரைப்படங்கள், வெப் சீரீஸ் உள்ளிட்டவைகளில் நடித்து வரும் இவர், சில பாடல்களும் பாடியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவருக்கு வயது 44 வயதாகிய போதிலும், இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வருஷம் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வேன் என பிரேம்ஜி உறுதியளித்து புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவு சமூகவலைதளவாசிகளின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் பிரேம்ஜி 24 வயதாகும் பெண் ஒருவரை தான் காதலித்து வருகிறார். அவரைத்தான் திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 293

    0

    0