Valentine’s Day Special: ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’… சினிமாவை மிஞ்சிய அஜித் – ஷாலினி காதல் கதை..!
Author: Vignesh14 February 2023, 5:30 pm
இந்தியா சினிமாவை பொறுத்தவரை காதல் திருமணம் என்றால் பஞ்சம் இல்லாத அளவிற்கு தற்போது ஆகிவிட்டது. அப்போதைய சினிமாவில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் காதல் திருமணம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்தவகையில், தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் – சாலினி என்று ரசிகர்கள் சொல்வார்கள். அஜித் – சாலினி இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள்.
தற்போது சினிமாத்துறையில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் உணர்வுபூர்வமாக காதலித்து விட்டு பிறகு விவாகரத்து செய்து கொள்ளும் சம்பவங்கள் தற்சமயம் அடிக்கடி நடந்து வருகிறது என்று சொல்லலாம். சினிமாத்துறையை பொருத்தவரை இன்றைக்கும் அதிகம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த ஜோடிகளுக்கு இடையில் அஜித்-சாலினி ஜோடி இன்னும் காதல் மாறாமல் அப்படியே வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதல் வாழ்க்கைப் பற்றிய சுவாரஸ்யமான கதையை இந்த வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷலாக இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவிற்கு பேபிசாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். குழந்தை பருவத்தில் பேபிசாலினி 55 படங்களில் தனது துறுதுறுப்பான நடிப்பால் நடித்து அசத்தியிருப்பார்.
ஆனால் கதாநாயகியாக சாலினி 7 படங்களில் மாட்டுமே நடித்திருப்பார். சாலினி தமிழில் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்திலே தனக்கென ஏராளமான ரசிகர் சம்பாதித்து விட்டார் என்று சொல்லலாம்.
அதற்குப் பின்னர் சாலினி இரண்டாவது திரைப்படமாக அமர்க்களம் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்த போதுதான் இவர்களின் காதல் கதை ஆரம்பிக்கத் தொடங்கியது என்று சொல்லலாம்.
ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தில் “சொந்தக்குரலில் பாட” என்ற பாடலை முதல்முறையாக பாடி அசத்தி இருப்பார். அந்தப்பாடல் பதிவாகி முடிந்ததும் இயக்குநர் அஜித்துக்கு அந்த பாடலை போட்டுக் காட்டியுள்ளார். அந்த பாட்டு அவருக்கு ரொம்ப பிடித்து விடவே தொடர்ந்து ரிப்பீட் மோடில் அஜித் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.
இது இவ்வாறு தொடர்ந்து கொண்டு இருக்கயில், அமர்க்களம் படத்திற்காக ஒரு காட்சியை ஊட்டியில் படமாக்கலாம் என சரணிடம் அஜித் தெரிவித்திருக்கிறார். அதற்கு இயக்குனர் ஓகே தெரிவித்து உடனடியாக இருவரும் காரில் ஊட்டிக்கு சென்று போது இந்த சாலை வசதிக்கு ஊட்டிக்கு சாதாரணமாக 12 மணி நேரத்தில் தான் செல்ல முடியும். ஆனால் அஜித் 7 மணி நேரத்திலேயே சென்று விட்டாராம்.
கிட்டதட்ட காரில் சென்ற 7 மணி நேரமும் ஷாலினி பாடிய “சொந்தக்குரலில் பாட” பாடல் நான் ஸ்டாப் ஆக திரும்ப திரும்ப ஒலித்து கொண்டு இருந்ததாம்.
இப்போது உள்ள லூப் மோட் ஆப்ஷன் எல்லாம் அப்போது இல்லை என்பதால் அந்த பாடலை அஜித்துக்கு கேசட்டில் 10 முறை கேசட்டில் பதிவு செய்து சரண் கொடுத்தாராம். அதேபோல் படப்பிடிப்பிலும் ஷாலினிக்கு அடிபட்டப்போது அஜித் துடித்துப் போய்விடுவாராம். இது அனைத்தையும் இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு அஜித் மற்றும் சாலினி இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். தனக்கான பெண் இவள் தான் என்று அறிந்த அஜித், நேராக ஷாலினியிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து விட்டாராம். அதற்கு எனக்கும் ஓகே என சாலினி காதலுக்கு பச்சைக் கொடி காட்டி உள்ளாராம்.
அஜித் – ஷாலினி 2000ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு தான் அனோஷ்கா என்ற மகளும், தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற மகனும் பிறந்தார்கள்.
கிட்டதட்ட 23 ஆம் ஆண்டு திருமண நாளை நெருங்கி கொண்டிருக்கும் இந்த காதல் ஜோடி எப்போதும் தமிழ் சினிமாவிற்கு சிறந்த ஜோடி என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.