பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா செர்பியாவை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் இவர்களுக்கு அகஸ்தியா என்கிற ஒரு அழகான மகளும் இருக்கிறார்.
இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இவர்கள் விவாகரத்து அறிவித்து சில நாட்களிலேயே ஹர்திக் பாண்டியா வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்து வரும் விஷயம் தற்போது ஆதாரத்துடன் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா. இலங்கை அணி உடனான T20 தொடருக்கு பின் தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இங்குதான் சம்பவமே நடந்துள்ளது. ஆம்,ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியாவுடன் தற்போது டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒரே லொகேஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பாடகி ஜாஸ்மினும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஹர்திக் பாண்டியாவை மட்டுமே ஃபாலோ செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்வதாகவும் தற்போது செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நட்டாஷாவை விவாகரத்து செய்ததற்கு இதுதான் காரணமா என அவரை கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளனர்.