நடாஷாவுக்கு ஜீவனாம்சம் 70 சதவீத சொத்து?.. விவாகரத்து முடிவை அறிவித்த ஹர்திக் பாண்டியா..!

Author: Vignesh
20 July 2024, 9:09 am

பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடமாடி பிரபலமானவர்தான் நடாஷா. இவர் தமிழிலும், அரிமா நம்பி என்ற படத்தில் நானும் உன்னில் பாதி என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். மேலும், இந்தி பிக் பாஸ் சோவிலும் போட்டியாளராக நடாஷா கலந்து கொண்டிருந்தார்.

முன்னதாக, இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியானது.

மேலும், உலககோப்பையை வென்ற போது கிடைத்த வரவேற்பு என ஹர்திக் பாண்டியா கேரியரில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது விவாகரத்தை அதிகாரபூர்வமாக இருவரும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், நடாஷா நேற்று அவரது சொந்த நாடான செரிபியாவுக்கு மகனை கூட்டி சென்று விட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் செய்தியும் தன்னுடைய சொத்தில் 70 சதவீதம் பங்கினை மனைவி நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா எழுதி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 173

    0

    0