ஹரிஷ் கல்யாணுடன் இணையும் பாலிவுட் நடிகர்..ஆஹா மஜா கூட்டணியா இருக்கே ..!
Author: Selvan5 December 2024, 3:46 pm
பான் இந்தியா படத்துக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்து நடித்து வருகிறார்.சமீபத்தில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில்,அன்பு கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றார்.
இப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது ஹரிஷ் கல்யாண் டீசல்,நூறுகோடி வானவில் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க: திடீரென ஆன்மிகத்தில் குதித்த கவர்ச்சி நடிகை : இதெல்லாம் ரொம்ப தப்புமா..கவலையில் ரசிகர்கள்..!
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராப் இணைவு
இந்நிலையில் இவர் 25 கோடி பட்ஜெட்டில் அடுத்த ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தை லிப்ட் படத்தை இயக்கிய வினித் வரப்ரஸாத் இயக்கி தயாரிக்கிறார்.
இப்படம் பான் இந்திய படமாக வெளியாகவுள்ளதால்,படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராப் இணைந்துள்ளார்.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.