காதல் மனைவியுடன் முதல் திருமணநாளை கொண்டாடிய ஹேண்ட்சம் ஹீரோ – கியூட் வீடியோ!

Author: Shree
28 October 2023, 7:20 pm
narmadha
Quick Share

தமிழில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் 2010ல் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.பிக்பாஸ் சீசன் 1 லும் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் கவனம் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த ‘ப்யார் ப்ரேமா காதல்’,

‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ ‘தாராள பிரபு’ உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே ஹரிஷ் கல்யாணின் ஹேண்ட்ஸம் லுக்கிற்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு தான் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்க்கபட்டார்.

இதனிடையே நர்மதா என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதி தங்களது முதலாவது திருமண நாளை இன்று கொண்டாடியுள்ளனர். அதன் வீடியோவை வெளியிட்டுள்ள ஹரிஷ் கல்யாண்,

காதல், சிரிப்பு, சின்ன சின்ன வேடிக்கையான சண்டைகள் மற்றும் சாகசங்கள் மூலம், நாங்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நர்மதா நான் உங்களுக்காக முதலில் இசையமைத்த இந்தப் பாடல் நினைவிருக்கிறதா? இந்த ஆசையை ஆடியோவாகப் பயன்படுத்தி சிறப்பிக்க முயற்சித்தேன். எனவே இந்த ஃபோன் பதிவு செய்யப்பட்ட பதிப்பைப் பொருட்படுத்த வேண்டாம். என்றாவது ஒரு நாள் பாடலாக உருவாக்குவேன் என்று நம்புகிறேன் என கூறி சில ரொமான்டிக் தருணங்களை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ:

Views: - 411

5

0