அடேங்கப்பா.. இமயத்தை எட்டும் ஹாரிஸ் ஜெயராஜின் சொத்து மதிப்பு..! எவ்வளவு கோடி தெரியுமா?

Author: Vignesh
8 January 2024, 5:50 pm

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை இசையின் மூலமாக பிடித்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரை ஹாரிஸ் மாம்ஸ் என செல்லமாக அழைத்து இன்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து 150 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில், ஒரு படத்திற்கு இசையமைக்க இவர் மூன்று கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், ஆண்டுக்கு 20 கோடி வரை இவருக்கு வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.

harris jayaraj

பார்க்க அரண்மனை போல் இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டின் மதிப்பு மட்டுமே 30 கோடி எனக் கூறப்படுகிறது. இவருடைய வீட்டிலே ஸ்டூடியோவையும் வைத்துள்ளார். ஹாரிஸ் பயன்படுத்தி வருவதில் ஹம்மர் கார் தான் இவருக்கு மிகவும் பிடித்தமான கார். சென்னையில், உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு சொந்தமாக மூன்று திரையரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இவைதான் இவரின் மொத்த சொத்து மதிப்பு ஆகும்.

harris jayaraj
  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!