உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற ஹாரி பாட்டர் நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
Author: Vignesh15 October 2022, 1:15 pm
பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜேகே ரவுலிங் எழுதிய புகழ்பெற்ற நாவல் ஹாரி பாட்டார். 1997-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை இந்த புத்தகம் 7 பாகங்களாக வெளிவந்துள்ளது.
மாயாஜாலங்கள் நிறைந்த குழந்தைகளை கவரும் வகையில் இந்த நாவலை தழுவி அதே பெயரில் ஹாரி பாட்டர் திரைப்படங்கள் வெளியாகி உலகளவில் பிரபலம் ஆனது. ஒவ்வொரு பாகமும் கற்பனைக்கும் எட்டாத வகையில் படமாக்கப்பட்டு வசூலில் வேட்டையாடியுள்ளது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டனின் ஸ்காட்லாந்தை சேர்ந்த 72 வயதான ராபி கல்ட்ரானியின் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மரண செய்தி ரசிகர்களுக்கு கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.