விடாமுயற்சி லேட் ஆகுது… பிரபல நடிகர் படத்தில் இணைந்த திரிஷா – அதிருப்தியில் அஜித்!

Author: Shree
8 July 2023, 4:39 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார்.

இதனால் இப்படத்தில் கமிட்டாகி இருந்ததாக கூறப்படும் திரிஷா தற்போது பிரபல மலையாள நடிகரான டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடென்டிடி படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விடாமுயற்சி எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தொடர்ந்து தடங்கல் வந்துக்கொண்டே இருப்பதால் அஜித் அப்செட்டில் இருக்கிறாராம்.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!