ப்ளீஸ் வாய்ப்பு கொடுங்கன்னு அஜித்தே வந்து நிற்பாரா…? கிடப்பில் போடப்பட்ட AK 62 – குதூகலத்தில் விக்கி!

Author: Shree
22 April 2023, 9:46 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இது குறித்து விக்னேஷ் சிவன் அண்மையில், சமூகவலைத்தளங்களில் எனக்கும் அஜித் சாருக்கும் பிரச்சனை இருப்பதாக கட்டுக்கதைகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை. தயாரிப்பாளருக்கு 2 ஆம் பாதியில் திருப்தி இல்லை என்பதால், தனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போது மகிழ்திருமேனி சார் மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல தனக்கு மகிழ்ச்சி தான். இதனால் எனக்கு துளியும் கூட வருத்தம் இல்லை என்று மகிழ் திருமேனியை பாராட்டினார்.

கடைசியாக அவர் கூறிய வார்த்தை தான் ஹைலைட்…. அதாவது, இந்த வாய்ப்பு என்னிடம் இருந்து இப்போது போனாலும் மறுபடியும் என்னிடம் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார். இயக்குனரை தேர்வு செய்து இத்தனை நாள் ஆகியும் இன்னும் AK 62 படத்தை ஆரம்பிக்கவே இல்லை. இதையெல்லாம் வைத்து பார்த்தால் மகிழ்திருமேனியை விட விக்னேஷ் சிவன் பரவாயில்லை என லைக்கா மற்றும் அஜித்திற்கு தோணிடுச்சோ? அதை மனதில் வைத்து தான் விக்கி இப்படி சூசகமாக பேசியிருக்கிறாரா? என கோலிவுட்டில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!