விஜயகாந்த் உடல் இவ்வளவு மோசமாகிவிட்டதா? கழுத்தை பிடித்து இழுத்த மனைவி பிரேமலதா!

Author: Shree
25 August 2023, 5:19 pm

மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார். திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடுகின்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடினார். தொண்டர்களை பார்த்து கையசைத்த அவர் மிகவும் பலவீனமடைந்து ஒருவரின் உதவியுடன் தான் கை அசைக்கவே முடிகிறது. மேலும், அப்போது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவரது கழுத்தை பிடித்து இயக்கிறார். இதைப்பார்த்த தொண்டர்கள் கேப்டன் இவ்வளவு பலவீனமாகி விட்டாரா? என வேதனை அடைந்துவிட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ