படம் ஓடல இவ்ளோ சம்பளம் கேக்கறீங்க : உச்ச நடிகரை அவமானப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 1:51 pm

சினிமாவில் ஒரு படம் ஓடினால் அடுத்த படத்திற்கான சம்பளத்தை நடிகர்கள் அதிகமாக கேட்பது சகஜமான ஒன்றுதான்.

அப்படித்தான் முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படம் ஹிட ஆனதும் மாதவன் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியது.

அலைபாயுதே படத்துக்கு பின்னர் மாதவன் நடித்த படம்தான் என்னவளே. இந்த படம் குடும்ப பின்னணி கொண்டு உருவானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படாததால் படம் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது.

இதையடுத்து பிரபல தயாரிப்பாளரிடம் ஏற்கனவே படம் ஒப்புக்கொண்ட மாதவன், அவரின் தயாரிப்பில் நடிக்க முற்பட்டபோது, சம்பளத்தை கம்மி பண்ண சொல்லி தயாரிப்பாளர் கேட்டுள்ளார்.

அதற்கு மாதவன் மறுத்துள்ளார், என்னவளே படம் ஓடவில்லைஅய எதுக்கு இவ்ளோ சம்பளம் கேக்கறீங்க என தயாரிப்பாளர் கடுப்பாகியுள்ளார்.

உடனே அவருடனான தயாரிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக மாதவன் கூறி வெளியேறினார். பின்னர் அவர் நடித்த ரன் படம் மெகா ஹிட் ஆனது.

இதையடுத்து மீண்டும் அதே தயாரிப்பாளர் மாதவனை அணுகியுள்ளார். அப்போது மாதவன் கேட்ட சம்பளம், தயாரிப்பாளருக்கே மாரடைப்பு வர வைத்தவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எதுக்கு இவ்ளோ சம்பளம் என கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னவளே படம் ஓடாத போது சம்பளத்தை குறைக்க சொன்னீர்கள், தற்போது ரன் மெகா ஹிட் ஆகியுள்ளதே அதனால் சம்பளத்தை அதிகப்படுத்துங்கள் என கேட்டுள்ளார்.

இதனால் வாயடைத்து போயுள்ளார் தயாரிப்பாளர். இந்த தகவலை இயக்குநர் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 446

    1

    0