படம் இன்னும் தாறுமாறா இருந்திருக்கும்… 7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ இவர் தான்!

Author: Shree
25 September 2023, 4:47 pm

தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் தான்.

இதில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார் . படத்தில் இவரது நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. வேலையில்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரியும் இளைஞனான ரவி கிருஷ்ணா அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு-க்கு குடிவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான சோனியா அகர்வாலை காதலிக்கிறார். ஆரம்பத்தில் காதலை மறுத்த சோனியா அகர்வால் பின்னர் காதலிப்பார்.

ஆனால், வீட்டில் வேறொரு மாப்பிள்ளையை பார்த்திடுவார்கள். கடைசியில் அந்த திருமணம் எப்படி நின்றது. ஹீரோ ஹீரோயினை எப்படி கரம்பிடித்தார் என்பது கதை. சூப்பர் அடித்த இப்படம் 19 ஆண்டுகள் ஆகியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அண்மையில் இப்படம் ரீ ரிலீஸ் ஆகியது.

இந்நிலையில் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா மற்றும் மாதவன் தானாம். ஆனால், ஏதே சில காரணங்களுக்காக அவர்கள் நடிக்கமால் போக செல்வராகவன் வேறு நடிகர்களை வைத்தும் சிறப்பாக படம் இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்