மனசிலாயோ பாட்டு மெகா ஹிட்டுக்கு காரணமே அவர் தான் – குதூகலத்தில் சூப்பர் ஸ்டார்!

Author:
22 September 2024, 4:29 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் புகழ் இயக்குனர் T. J. ஞானவேல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த திரைப்படத்திலிருந்து இடம்பெற்றிருந்த மனசிலாயோ பாடல் மாபெரும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது.

இந்த இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பாடலின் மாபெரும் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது இந்த பாடலுக்கு கொரியோகிராப் செய்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தான் எனக் கூறி அவருக்கு மிகப்பெரிய நன்றி என கூறினார்.

இதை அடுத்து பல பேர் ரீல்ஸ் வெளியிட்டு வருவது தொடர்ந்து இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுவதற்கு இந்த பாடல் மிகப்பெரிய காரணமாக அமைந்திருப்பதாக அவர் பெருமை பொங்க பேசினார். தினேஷ் மாஸ்டரின் எளிமையான நடனமும் அவரது கொரியோகிராப் தான் இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்று தந்ததாக ரஜினி தெரிவித்தார் .

மேலும் இந்த திரைப்பட பாடலை எழுதிய சூப்பர் சுப்பு மற்றும் அறிவு ஆகியோருக்கும் பாடல்களை பாடியவர்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார். வேட்டையன் திரைப்படத்தின் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அனிருத் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து சூப்பர் ஹிட் பாடலை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: DD மாதிரி ஒரு Anchor பார்க்கவே முடியாது.. பிரியங்காலா ஒண்ணுமே இல்ல – போட்டுடைத்த பிரபலம்!

இந்த பாடலை குறித்து கூறியிருக்கும் மஞ்சு வாரியர் இந்த பாடல் இவ்வளவு பெரிய வரவேற்பு பெறும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ரஜினிகாந்த் கூறியதை போலவே இந்த பாடலுக்கு மிகவும் சிறப்பாக தினேஷ் மாஸ்டர் கொரியோகிராப் செய்துள்ளதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்ததாக மஞ்சு வாரியர் கூறியிருந்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி