Bedroom-ல் மாட்டு கொட்டாய்… மலையடிவாரத்தில் வீடு – வில்லன் நடிகரின் அழகான இயற்கை வாழ்க்கை!

Author: Shree
28 October 2023, 5:27 pm
kishore
Quick Share

வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கிஷோர். கன்னட நடிகராக திகழ்ந்து தமிழில் பொல்லாதவன் படத்தில் செல்வம் ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அதிகமாக நடித்து பிஸி வில்லன் நடிகராக வலம் வந்தார்.

ஆரம்பம், கபாலி, நிஷப்தம், மாறா, நவரசம் போன்ற படங்களில் நடித்து வந்த கிஷோர் பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசன் கதாபாத்திரத்திலும் காந்தாரா படத்தில் முரளிதரன் என்ற போலிஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழில் குணசித்திர வேடம், மற்றும் வில்லன் ரோல்களில் பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி மிரளவைத்திருப்பார்.

குறிப்பாக தனுஷின் ஆடுகளம் படத்தில் கிஷோர் வில்லனாக சிறப்பாக நடித்திருப்பார். மேலும் ஹரிதாஸ் படத்தில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைக்கு அப்பாவாக நடித்திருப்பார். அந்த படத்திலும் கிஷோரின் நடிப்பு பிரம்மாதமாக இருக்கும். வில்லனாக திரையில் மிரட்டினாலும் நிஜத்தில் அமைதியான அழகான மனதிற்கு பிடித்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கிஷோர்.

ஆம், கிஷோர் கர்நாடகாவில் உள்ள மலையடிவாரத்தில் அழகான வீடு கட்டி அங்கு மாடு, மரம் , செடி கொடி என இயற்கை சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த கிஷோர் தான் வளர்க்கும் நாட்டு மாடுகளை தனது பெட் ரூமிலே தங்க வைத்துக்கொண்டதாக கூறினார். மேலும் தனக்கு நாட்டுமாடு சாணம், கோமியம் உள்ளிட்டவை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Views: - 803

27

5