அதுவும் நல்லா தான் இருந்திருக்கும்… ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ இவரா?

Author: Shree
19 July 2023, 12:03 pm

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஜீன்ஸ். காதலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் நாசர் முக்கிய மற்றும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இவர்களுடன் ராஜூ சுந்தரம், லட்சுமி, மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல நடிக நடிகையர் முக்கிய கதாபாத்திரங்களின் உறவுக்காரர்களாக முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் முதலில் நடிக்க அஜித்திடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அஜித் பேசியதால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

இதை அடுத்து பிரபுதேவா நடிக்க இருந்தது. அவரும் சில பிரபுதேவா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் இப்படத்தின் வாய்ப்பு நடிகர் அப்பாஸிற்கு சென்றுள்ளது. ஆம், இயக்குனர் ஷங்கர் ஜீன்ஸ் படத்தின் கதையை முதலில் அப்பாஸ் இடம் தான் கூறியுள்ளார். கதை கேட்டுவிட்டு அப்பாஸும் ஓகே சொல்ல தனது மேனேஜரை பேச சொல்கிறேன் என கூறிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளார்.

இதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை, அப்பாஸ் திடீரென படத்திலிருந்து நீக்கப்பட்டு பின்னர் பிரஷாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். பிரசாந்தின் சினிமா கெரியரில் மிக முக்கிய படமாக ஜீன்ஸ் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தனக்கு வரவிருந்த வாய்ப்புகளும் கைநழுவி போனதாக அப்பாஸ் பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்தப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் அப்போவே 71வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 603

    8

    3