பருத்தி வீரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – அமீர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Author: Shree
25 November 2023, 4:36 pm

தமிழ் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பருத்தி வீரன். அமீர் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுக நாயகனாக அறிமுகம் ஆன கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை வியந்து பார்க்க செய்தது.

இப்படத்தில் பருத்தி வீரன் – முத்தழகு காதல் முரட்டுத்தனமாக அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் அமீர். இருந்தே பருத்திவீரன் மீது காதல் கொண்டு இருந்த முத்தழகு, வளர்ந்ததும் பல முறை அவளுடைய காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் பருத்திவீரன் அவளை தவிர்க்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. ஆனால் இவர்கள் திருமணத்திற்கு முத்தழகு வீட்டார் எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள்.

இதில் பிரியாமணியின் மிகச்சிறந்த நடிப்பிற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து பேசிய இயக்குனர் அமீர் பருத்தி வீரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான். ஆனால் பின்னர் கார்த்தி நடித்து எல்லோரையும் வியக்க வைத்துவிட்டார் என்றார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…