எனக்கு முதலில் லட்சத்தில் சம்பளம் கொடுத்தது இவருதான்… மனம் நெகிழ்ந்த ரஜினிகாந்த்!

Author: Shree
10 July 2023, 12:44 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி மிக முக்கியமான படமாகும். இருவருக்கும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பியிருக்கின்றனர்.

இப்டியான நேரத்தில் ரஜினி பேட்டி ஒன்றில் தனக்கு முதலில் லட்சத்தில் சம்பளம் கொடுத்தது பஞ்சு அருணாச்சலம் சார் தான். அதற்கு முன் நான் ரூ.30 ஆயிரம் தான் சம்பளமாக வாங்கிவந்தேன் என கூறினார். தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆன பஞ்சு அருணாச்சலம் . கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 288

    0

    0