பல நோய்களால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த்… கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?

Author: Vignesh
28 December 2023, 3:48 pm

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை 6.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு உடலில் என்னென்ன பிரச்சனைகளால் பாதிப்புகள் இருந்துள்ளது என்பது குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவருக்கு நீரிழிவு நோயால் கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலது கால் விரல்களில் சிலவற்றைக் கடந்த 2022 ஆம் ஆண்டு அகற்றியுள்ளனர்.

தைராய்டு பிரச்சனையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது. சிறுநீரக பிரச்சனை, முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை. தைராய்டு சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தில் நரம்பு பாதிக்கப்பட்டு, அவருக்கு ஞாபகம் மறதி இருந்து வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காய்ச்சல் சளி இரும்பல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். சில தினங்களுக்குள் மீண்டும் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் வென்டிலேட்டர் மூலம் சுவாசம் கொடுக்கப்பட்ட நிலையில், நுரையீரலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக உயிரிழந்துள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 450

    0

    0