2-வது திருமணம்?.. பிரபல நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் லோகேஷ்.. பகீர் கிளப்பும் பயில்வான்..!(Video)

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

மேலும் படிக்க: என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. அதிரடியாக முடிவுக்கு வரும் Vijay TV ஃபேவரட் தொடர்..!

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் படிக்க: அவருக்காக Adjust பண்ணப் போனேன் யூஸ் பண்ணிட்டாங்க.. கதறும் பிரபல நடிகை..!

இந்நிலையில், படங்களில் பிஸியாக நடித்து வரும் சுருதிஹாசன் கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றி உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை கமலின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு “இனிமேல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14ஆம் தேதி கமலின் ராஜ் கமல் நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த ஆல்பத்திற்கு சுருதிஹாசன் இசையமைக்க கமலஹாசன் வரிகள் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் படிக்க: 2-வது திருமணம்?.. பிரபல நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் லோகேஷ்.. பகீர் கிளப்பும் பயில்வான்..!(Video)

இந்நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆல்பத்தின் பாடலின் முழு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாடல் வெளியீட்டு விழாவிற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளனர். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் இடம் இயக்குனராக உங்களைப் பார்த்த உங்கள் மனைவி நடிகராக பார்க்கும்போது என்ன ரியாக்ஷன் பண்ணுவார்கள் என்ன சொல்வார்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

அதற்கு பதில், அளித்த லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்தில், இருந்து பொதுவாக என் தனிப்பட்ட கேள்விகளை ஒதுக்கி வருகிறேன். அதைப் பற்றி மட்டும் இனிமேல் பேச விரும்பவில்லை. ஏனென்றால், நான் சினிமாவிற்குள் வரும்போது அது வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். எனக்கும் உங்களுக்குமான நேரடி தொடர்பு இருக்கணும் என்று நினைக்கிறேன். பாராட்டுவதாக இருந்தாலும் சரி விமர்சிப்பதாக இருந்தாலும் சரி அதுவே போதும் என்று நினைக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியக்கூடாது என்று நினைக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஸ்ருதிஹாசனுடன் மிகவும் நெருக்கமாக நடித்த லோகேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தற்போது, கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் லோகேஷ் பிரபல வாரிசு நடிகை உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என புது குண்டை தூக்கி போட்டு உள்ளார். இனிமேல், ஆல்பம் பாடலில் லோகேஷ் உடன் நடித்தது குறித்து ஸ்ருதிஹாசன் கூறியதை நினைவு படுத்திய பயில்வான் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் லோகேஷ்-யை காதலிக்காமல் இருக்க முடியாது என்று கூறியிருந்தார்.

அப்படி என்றால், ஸ்ருதிஹாசன் லோகேஷனை காதலிக்கிறார் என்று தானே அர்த்தம் அதோடு லோகேஷ் ஒரு பிரமோஷன் கலந்து கொள்ளும்போது உங்கள் வீட்டில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஏதும் சொல்லவில்லை என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, குடும்பம் பற்றி இங்கு நான் பேச விரும்பும் இல்லை என்று கூறி இருந்தார். இதிலிருந்து, லோகேஷ் குடும்பத்தில் புதிய பிரச்சினை வெடித்துள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

5 minutes ago

எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…

28 minutes ago

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

2 days ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 days ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 days ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

2 days ago

This website uses cookies.