ஹெலிகாப்டர் உறுதி: சொன்னதை செய்து காட்டிய லோகேஷ்.. லியோ படக்குழு ஹேப்பி!!!
Author: Vignesh21 October 2023, 5:36 pm
உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.
உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாளில் வசூல் செய்த இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
விக்ரம், ஜெயிலர் படங்களில் நடந்தது போல் ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர்களுக்கு கார் அல்லது பரிசுத் தொகை கொடுக்கும் பழக்கம் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில், “எனக்கு வசூல் பிரச்சனை எதுவும் இல்லை. எவ்வளவு லாபம் வசூலித்தாலும் எனக்கு கவலையில்லை. நஷ்டமில்லாமல் இருந்தால் போதும். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கேட்டால், படத்தின் வெற்றிக்காக ஹெலிகாப்டர் கேட்பேன் என்று முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, மேயாத மான், ஆகாஷி, குளு குளு படங்களின் இயக்குனரும், மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களின் வசனகர்த்தாவும் ஆகிய ரத்னகுமார் தனது எக்ஸ் போஸ்டில் லோகேஷ் குறித்து பதிவிட்ட பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, இப்படம் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்ததால், ரத்னகுமார், “லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
Helicopter Uruthi @Dir_Lokesh ❤️😊.#Leo#BlockbusterLeo pic.twitter.com/njoigAjjsy
— Rathna kumar (@MrRathna) October 20, 2023