கடந்த ஒரு வார காலமாகவே மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகளும் அதன் புகார்களும் தலைவிரித்து ஆடி வருகிறது. இதை அடுத்து பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் மோகன் லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மலையாள சினிமா நிர்வாகிகள் கூண்டோடு நேற்று ராஜினாமா செய்து விட்டனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரேவதி சம்பத் உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து அதிர்ச்சி கிளப்பி வருகிறார்கள் .அந்த வகையில் தற்போது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பிரபல நடிகர் திலகனின் மகள் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி அதிர வைத்திருக்கிறார்.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக இருந்து வரும் திலகனின் மகள் பத்திரிகையாளரிடம் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். அதில் என்னுடைய தந்தை இறந்த போது ஒரு பெரிய நடிகர் என்னிடம் போனில் பேசினார்.
அப்போது நான் உன்னுடைய அப்பா போன்று என்று பேச துவங்கிய அவர் என்னை சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருக்கிறேன் என சொல்லி வாய்ப்பு கொடுக்கிறேன் வா என கூப்பிட்டார். அதன் பிறகு அவர் என்னுடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு வா என்று நேரடியாகவே பாலியல் இச்சைக்கு என்னை அழைத்தார்.
நான் அவரிடம் இருந்து அப்படி ஒரு வார்த்தை கேட்டதும் அப்படியே அறிந்து போய் விட்டேன். ஏனென்றால் அவர் ஒரு மிகப்பெரிய ஹீரோ. மலையாள சினிமாவில் இது போன்ற தவறுகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனவே அவர்களை தண்டிக்க வேண்டும் என பேசி இருந்தார். இப்போது கேரளா சினிமாவில் இது மேலும் பேசுபொருளாகி பரபரப்பாகி உள்ளது. இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.