முதிர்ச்சி இல்லை; மூத்த இயக்குனரால் நிராகரிக்கப்பட்ட கமல் பட நாயகி

Author: Sudha
3 July 2024, 2:44 pm

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஶ்ரீதர். 60 களில் அனைவராலும் அறியப்பட்ட இயக்குனராக வலம் வந்தவர்

இவருடைய கதை மற்றும் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை. ஶ்ரீகாந்த் வெண்ணிற ஆடை நிர்மலா இவர்களின் நடிப்பில் வெளிவந்தது.

இந்த திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வுக்கான ஆடிஷன் நடைபெற்ற போது முக்கிய கதாபாத்திரமான ஷோபா என்கிற சௌபாக்யவதி கதாபாத்திரத்தில் நடிக்க 2 பெண்கள் வந்தனர். முதலில் வந்தவர் ஹேமாமாலினி.

பிறகு கதாபாத்திரத்துக்கு ஏற்ற போதிய முதிர்ச்சி இல்லை என ஶ்ரீதர் அவரை திரைப்படத்திலிருந்து நீக்கினார்.

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ராஜஶ்ரீயின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் நிராகரிக்கப்பட்ட சாந்தி, நிர்மலாவாக பெயர் மாற்றி நடிக்க வைக்கப்பட்டார்.

கதாநாயகி பாத்திரத்துக்கு நிராகரிக்கப்பட்ட நடிகை ஹேமா மாலினி..

தேர்வு செய்யப்பட்ட நடிகை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
  • Close menu