தங்கம் சார் என் தலைவி தம்மு…. கூட்டத்தில் அத்துமீறிய இளைஞர்… தமன்னா என்ன செய்தார் தெரியுமா? வீடியோவை பாருங்க!

Author: Shree
6 August 2023, 5:56 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

Tamannaah -updatenews360

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

Tamannaah -updatenews360

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

Tamannaah

குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட டான்ஸ் தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்ப்போது பீக்கில் இருக்கும் நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் இடம் பிடித்துவிட்டார். அதற்காகவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தமன்னா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அப்போது பாதுகாவலர்கள் கைகோர்த்தபடி தமன்னாவை கூட்டத்தில் இருந்து பார்த்துக்கப்பாக அழைத்துவந்தார்கள். அந்த நேரத்தில் தமன்னாவின் தீவிர ரசிகர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு ஓடிவந்து தமன்னாவின் கை பிடித்து குலுக்கினார். உடனே அங்கிருந்த பவுன்சர்கள் அவரை அடித்து விரட்ட தமன்னா அவரை விட்டுவிடச்சொல்லி கெஞ்சி அந்த இளைஞனை அழைத்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு பத்திரமாக செல்லுங்கள் என்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையிலும் தமன்னா நடந்துக்கொண்ட விதத்தை எல்லோரும் பாராட்டியுள்ளனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!