பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஹீரோ விலகல் : சினிமா நடிகரை களமிறக்கிய படக்குழு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 5:46 pm

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருபவர் 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். யார் விலகி போனாலும், தன்னுடைய கதாபாத்திரத்தை செமயாக நடித்து வருகிறார்.

ஆனால் தற்போது இவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Hungama ஓடிடியில் மாயத்தோற்றம் என்ற வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே வதந்தி சீரியஸில் நடித்ததில் இருந்தே வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், என்னுடைய நடிப்பை பார்த்து உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குமரன் சீரியலில் தொடர்வாரா அல்லது சினிமா பக்கம் சாய்வார என்பது குறித்து முடிவெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை குமரன் சென்றுவிட்டால் அந்த இடத்திற்கு மாஸ்டர் மகேந்திரன் நடிக்க வைக்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுகிறது. இது குறித்த உறுதியான தகவல் கூறப்படவில்லை.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?