நட்பு To காதல்.. கூட நடித்த ஹீரோயின்களை மயக்கிய 6 ஹீரோக்கள்.. லிஸ்டில் இருக்கும் டாப் ஜோடிகள்..!

Author: Vignesh
27 May 2023, 2:00 pm

அஜித்-ஷாலினி

அமர்க்களம் படத்தில் அஜித் நடிப்பில் வெளியானது. இதில் ஹீரோயினாக ஷாலினி நடித்திருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங் போது ஏற்பட்ட நட்பு பின் காதலாய் மாறி தற்போது வரை இவர்கள் கோலிவுட் நட்சத்திர ஜோடியாக இருந்து வருகிறார்கள்.

ajith shalini - updatendews360

ஆர்யா-சாயிஷா

ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து சாயிஷா நடித்திருந்தார். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் காதலித்து, பின்னர் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Arya and Sayyeshaa02- updatenews360

ஆதி- நிக்கி கல்ராணி

2017 -ம் ஆண்டு மரகத நாணயம் படத்தில் வெளிவந்தது. நகைச்சுவை த்ரில்லர் படமான இதில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, கடைசியில் இருவரும் காதலில் விழுந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Aadhi-And-Nikki-Galrani-updatenews360

கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்

தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஷூட்டிங்கில் இருவரும் நண்பர்களாக பழகி அதன் பின் காதல் மலர்ந்து. கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

gautham karthik manjima-updatenews360

பகத் பாசில்-நஸ்ரியா

மலையாள மொழி படங்களில் பகத் பாசில்-நஸ்ரியா முக்கிய பிரபலங்கள் ஆவார்கள். இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்ததால் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார்கள்.

nazriya fahadh-updatenews360

சூர்யா ஜோதிகா

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஜோதிகாவைக் காதலித்து மணந்தார். தற்போது அவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

jyothika-surya updatenews360

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 592

    9

    2