கிஸ் அடிச்சிட்டு அந்த வார்த்தை சொல்லுவாரு – நாக சைதன்யாவை பற்றி கூறிய பிரபல நடிகை!
Author: Shree10 April 2023, 9:53 am
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.

இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபால உடன் காதல் கிசுகிசுகிக்கப்பட்டு வருகிறார்.
ஆனால் தபோது நாகசைதன்யாவின் உண்மை குணம் பற்றி அவருடன் Bangarraju படத்தில் நடித்த நடிகை தக்ஷா நகார்கர், ” நாகசைதன்யா ரொம்ப kind.. ரொம்ப ஸ்வீட் ஆக நடந்துகொள்வார். அதிலும் குறிப்பாக நடிகைகளிடம் அவர் லிமிட்டோடு நடந்துகொள்வார்.

என்னுடன் நடிக்கும்போது கட்டிப்பிடிக்கும் , கிஸ் கொடுக்கும் காட்சிகளில் நடித்துவிட்டு ‘Sorry’ என மன்னிப்பு கேட்பார். அந்த அளவுக்கு நல்லவர் அவர்” என தக்ஷா கூறி இருக்கிறார்.இப்படி இருக்கும் மனுஷனா சமந்தாவை விவகாரத்து செய்த சில மாதங்களிலேயே நடிகை சோபிதா துலிபாலவுடன் டேட்டிங் செய்து வருகிறார் என ரசிகர்கள் ஷாக்கியுள்ளனர்.