மஞ்சிமல் பாய்ஸ் வந்துமா சிக்கல்? குணா படத்திற்கு தடை; சிக்கலில் பிரமிட்,..

Author: Sudha
11 July 2024, 11:45 am

மஞ்சிமல் பாய்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, குணா திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. குணா படத்தின் பல வசனங்கள் மற்றும் பாடல் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்தது.குறிப்பாக மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல’ போன்ற வசனங்கள் பிரபலம் அடைந்தது.

பிரமிட் ஆடியோ நிறுவனம் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக அறிவித்தது. இதற்கிடையே குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

1991-ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படம், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குணா படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜூலை 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 137

    0

    0