இந்திய சினிமாவில் கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள்..லிஸ்டில் யார் டாப் தெரியுமா?
Author: Vignesh23 March 2024, 6:10 pm
பொதுவாக இந்திய சினிமாவை பார்க்கும் போது மிகவும் முக்கியமான இடத்தில் இருப்பது தமிழ் சினிமா ஆஸ்கார் வரை சென்ற படங்கள் எல்லாம் நிறைய இதில் உள்ளன. அதிகம் மொழிகளில் டப் செய்யப்பட்ட தமிழ் படங்களும் உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற நடிகர்கள் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள்.
இவர்களது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே, அன்றைய தினம் தியேட்டர்களில் திருவிழா கோலமாக இருக்கும். ஆனால், நடிகர் விஜய் தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலக இருக்கிறேன் என்று கூறி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நடிகர்கள் யார் என்ற லிஸ்ட் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷாருக்கான்- ரூ. 150 முதல் ரூ. 250 கோடி
ரஜினிகாந்த்- ரூ. 150 முதல் ரூ. 210 கோடி
விஜய்- ரூ. 130 முதல் ரூ. 200 கோடி
பிரபாஸ்- ரூ. 100 முதல் ரூ. 200 கோடி
அமீர்கான்- ரூ. 100 முதல் ரூ. 175 கோடி
ஆனால், கடந்த சில நாட்களாக விஜய் தனது 69 ஆவது படத்திற்காக 250 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.