உங்கள் கிரீடம் உங்கள் பெருமை; ஆனால் வெற்றி பெற விரும்பினால்!,, ஹினா கானின் உருக்கமான பதிவு
Author: Sudha6 July 2024, 10:57 am
நாகினி நடிகை ஹினா கான் சில தினங்களுக்கு முன்பு தனக்கு ஸ்டேஜ் 3 மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும் அதிலிருந்து மீண்டு வந்து விடுவேன் எனவும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
முன்னணி நடிகை சமந்தா உள்ளிட்ட பலரும் அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று தனது தலைமுடியை வெட்டிக்கொள்ளும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஹினா கான்
https://www.instagram.com/reel/C8_PuYCInmC/?utm_source=ig_web_copy_link
தலைமுடி என்பது பெண்களுக்கு கிரீடம் போன்றது. கீமோதெரபி சிகிச்சைக்கு செல்வதால் அது கண்டிப்பாகக் கொட்டி விடும். எனவே தலைமுடியை குறைத்து கொள்ள முடிவு செய்தேன் என பதிவிட்டார்.
அந்த வீடியோவானது கண்ணாடியின் முன் அமர்ந்திருக்கும் ஹினாவுடன் தொடங்குகிறது, காஷ்மீரி மொழியில் பேசி அழும் தாயின் அழுகை இதயத்தை கனக்கவைக்கிறது. தனது தாயை சமாதானப்படுத்தும் வகையில், ஹினா உறுதியான புன்னகையை பதிலாக தருகிறார். அவரது கூந்தலானது வெட்டப்படுகிறது.
“நம்மில் பெரும்பாலானோருக்கு, நம் தலைமுடி நாம் கழட்டி வைக்காத கிரீடம். ஆனால் நீங்கள் ஒரு கடினமான போரை எதிர்கொண்டால், நீங்கள் அந்த கிரீடத்தை இழக்க நேரிடும். உங்கள் தலைமுடி – உங்கள் பெருமை, உங்கள் கிரீடம்…ஆனால் நீங்கள் வெற்றி பெற விரும்பினால், நீங்கள் கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.