மீண்டும் வைரலாகும் “அஜித்தே”…AK-க்கு தனது ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஹிப் ஹாப் ஆதி..!
Author: Selvan13 January 2025, 5:58 pm
அஜித்தின் வெற்றியை பாடல் மூலம் கொண்டாடிய ஆதி
நடிகர் அஜித் சினிமாவில் பல வெற்றிகளை குவித்து நட்சத்திர நடிகராக வளர்ந்து,தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளாமே வைத்துள்ளார்.அஜித் ஏற்கனவே தன்னுடைய ரசிகருக்கு என்னை தல என்றும்,எனக்கு ரசிகர் சங்கம் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பட்டி தொட்டி எங்கும் “கடவுளே அஜித்தே”வசனம் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆன நிலையில்,அஜித் தன்னுடைய பெயருடன் வேற எந்த அடைமொழியோ பயன்படுத்த வேண்டாம் என அன்பு கட்டளை விடுத்தார்.இந்த நிலையில் நேற்று முடிந்த துபாய் 24H கார் ரேஸில் அஜித் அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.
இந்த வெற்றியை அஜித் தனது அணியுடன் கோலாகலமாக சந்தோசம் பொங்க கொண்டாடினர்.அவருடைய வெற்றியை பார்த்து உலகம் முழுவதும் இருக்க கூடிய ரசிகர்கள்,சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் என பலர் தங்களுடைய வாழ்த்துக்களை அஜித் மற்றும் அஜித் அணிக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும்,பாடகரும்,நடிகருமான ஹிப் ஹாப் ஆதி அஜித்தின் கார் ரேஸின் வெற்றியை பாராட்டி தானே எழுதி,இசையமைத்து,பாடி ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார்.
இப்பாடலில் சமீபத்தில் வெளியான அஜித்தே என்ற வசனத்தை சேர்த்துள்ளதால் தற்போது ரசிகர்களிடையே ஆதியின் பாடல் வைரல் ஆகி வருகிறது.