குஷ்பு என்ன லவ் பண்ணனும்… அதுக்கு தான் அப்படி செஞ்சேன்… பிரபல நடிகர் செய்த ட்ரிக்..!

Author: Vignesh
8 May 2023, 5:30 pm

நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக பாண்டியராஜன் அறிமுகமானவர். இவர் கன்னி ராசி திரைப்படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஆனால் பாண்டியராஜனை இயக்குனர் என்பதை விடவும் ஒரு காமெடி நடிகனாக தான் பலருக்கும் தெரியும். அவரது 2 வது திரைப்படமான ஆண்பாவம் திரைப்படத்தில் முதன் முதலாக நடிகராக பாண்டியராஜன் அறிமுகமானார்.

pandiarajan-updatenews360

ஆனால் பாண்டியராஜன் உடல் பாவனைகள் நகைச்சுவைக்கு ஏற்றாற் போல இருந்ததால் இவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்காமல் தொடர்ந்து நகைச்சுவை கதாநாயகனாகவே நடித்து வந்தது குறிப்பித்தக்கது.

முன்னதாக இவரது படங்களில் சண்டை காட்சிகளில் நடித்தாலும் கூட அதுவும் நகைச்சுவையாகவே இருக்கும் என்கிற நிலை இருந்தது. இதனிடையே தான் கோபாலா கோபாலா என்கிற படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக குஷ்பு நடித்தார்.

pandiarajan-updatenews360

அப்போது நடிகை குஷ்பு மிக பிரபலமான நடிகையாக இருந்த காரணத்தால், குஷ்புவை பாண்டியராஜை காதலிப்பது போன்ற காட்சி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் அந்த படத்தில் இருந்தது. ஆனால் அது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக, சண்டையிட்டோ அல்லது அழகால் குஷ்புவை ஈர்ப்பது போன்ற காட்சியை வைத்தால் நன்றாக இருக்காது என்பதற்காக, யோசித்த பாண்டியராஜன் படத்தில் இருவரும் லிஃப்ட்டில் மாட்டிக்கொள்வது போன்ற காட்சியை வைத்ததாக தெரிவித்துள்ளார்.

pandiarajan-updatenews360

பாண்டியராஜன் லிஃப்டிலேயே சமைத்து குஷ்புவிற்கும் கொடுத்து அவரை ஈர்த்துவிடுவார். மேலும், கோபாலா கோபாலா படத்தில் அது மிகவும் பிரபலமான காட்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காட்சியால் மக்களும் குஷ்பு பாண்டியராஜனை காதலிப்பதை ஏற்றுகொண்டனர் என இந்த விஷயத்தை பாண்டியராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 579

    0

    0