லைகா நிறுவனத்துக்கு லாபம் கொடுத்தது கத்தி மட்டுமா? அதிகாரப்பூர்வ தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2025, 10:58 am
இலங்கையை சேர்ந்த லைகா நிறுவனம் முதன் முதலில் 2014வது வருடம் தனது முதல் சினிமா படத்தை தயாரித்தது. தமிழ் சினிமாவில் கால் பதித்த போது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையும் படியுங்க : அனுபவம் எப்படி இருந்துச்சு…? பிக் பாஸ் நடிகையுடன் ஊர் சுற்றிய ரயான் : கசிந்த வீடியோ!
முதல்முதலாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யை வைத்து கத்தி படத்தை தயாரித்தது. கடும் எதிர்ப்பு எழுந்தாலும், படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு கடும் நெருக்கடியை சந்தித்து வெளியிட்டது.
லைகாவுக்கு கைக்கொடுத்தது கத்தி மட்டுமா?
படம் வெளியானதும் மாஸ் ஹிட் அடித்தது. 70 கோடியில் உருவான படம் என்றாலும், அப்போது 140 கோடி ரூபாய் வரை வசூலித்தது. விஜய் கேரியரில் சிறந்த திரைப்படமாக இதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து லைகா நிறுவனம் அடுத்தடுத்து படங்களை தயாரித்தது. ஆனால் அப்போது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை என்பது ஆச்சரியமே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களை லைகா தயாரித்தது.
தமிழில் எமன், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கோலமாவு கோகிலா, டான், வடசென்னை, 2.0, செக்க செவந்த வானம், தர்பார், பொன்னியின் செல்வன் 1&2, லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் என அடுத்தடுத்து படங்களை தயாரித்தது.
ஆனால் இதில் குறிப்பிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே லாபம் பார்த்தது. குறிப்பாக டான், பொன்னியின் செல்வன் படங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு பாதிப்பை கொடுக்கவில்லை. கத்தி படம் மட்டுமே இரடிப்பு லாபம் வழங்கியுள்ளதாக விக்கிப்பீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.