நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

Author: Prasad
29 April 2025, 2:27 pm

நானியின் HIT

பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த “HIT: The First Case”, “HIT: The Second Case” ஆகிய இரண்டு பாகங்களை தொடர்ந்து “HIT:The Third Case” என்ற மூன்றாவது பாகம் தற்போது வெளிவரவுள்ளது. 

hit the third case director said that the person below age 18 please do not watch this film

முந்தைய இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து நானி நடிப்பில் மூன்றாவது பாகம் வெளிவந்துள்ளது. முந்தைய இரண்டு பாகங்களையும் இயக்கிய சைலேஷ் கொலனு என்பவர்தான் இந்த மூன்றாவது பாகத்தையும் இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 

நீங்க மட்டும் என் படத்தை பார்க்கவேண்டாம்

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் Pre Release Event சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய இத்திரைப்படத்தின் இயக்குனரான சைலேஷ் கொலனு, “நாங்கள் மிகவும் நேர்மையாக சொல்கிறோம். இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் இருந்தே படம் முழுவதும் அதிகளவு வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

hit the third case director said that the person below age 18 please do not watch this film

ஆதலால் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இத்திரைப்படம் ஏற்கத்தக்கதல்ல. தயவு செய்து 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டாம்” என கூறியுள்ளார். இயக்குனர் சைலேஷ் கொலனுவின் இந்த நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?
  • Leave a Reply