அச்சு அசல் அஜித்தை அப்படியே உரித்து வைத்திருக்கும் ஹாலிவுட் இயக்குனர்.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
24 July 2023, 6:45 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. உலகில் ஒருவரை போல் ஏழு பேர் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்ற விஷயத்தை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் பிரபல மாடல் ஒருவர் அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

ajith-updatenews360

அதைத் தொடர்ந்து தற்போது அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் அச்சு அசல் பார்ப்பதற்கு அஜித் போலவே இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

ajith-updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 263

    1

    0