அப்படி இல்லைனா செருப்பால அடிங்க.. வெறுப்பில் புலம்பிய இயக்குனர்..!(வீடியோ)
Author: Vignesh4 April 2024, 7:10 pm
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளராக கலந்து கொண்டவர் விக்னேஷ் கார்த்திக். அதன் பின்னர் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து, அவர் குறும்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த நிலையில், தற்போது ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல, திட்டம் இரண்டு, அடியே போன்ற படங்களை இயக்கி வந்தார்.
சமீபத்தில் பல நட்சத்திரங்களை வைத்து ஹாட்ஸ்பாட் என்ற படத்தினை இயக்கி இருந்தார். A சர்டிபிகேட் பெற்ற நிலையில், இப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படத்தின் டிரைலர் வந்தபோது பலவிதமான விமர்சனங்களை பெற்று வந்தது. அதிலும், கெட்ட வார்த்தைகளும் ஆபாச வார்த்தைகளும் காட்சிகள் முகம் சுளிக்க வைத்திருந்தது.
மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!
இந்நிலையில், படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், விக்னேஷ் கார்த்திக் பேட்டி ஒன்றில் புலம்பி உள்ளார். அதாவது, படத்தினை தியேட்டரில் வந்து பார்த்தீர்கள் என்றால் நல்லா இருக்கும். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தியேட்டர் வந்து பாருங்கள் கண்டிப்பாக படம் பிடிக்கும், பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.