மஞ்சப்பை எடுத்துட்டு காய்கறி வாங்க போன சமந்தா… நாகார்ஜூனா வீட்டு மருமகளானது எப்படி?

Author:
9 August 2024, 7:12 pm

இரண்டு நாட்களாக நாக சைதன்யாவின் இரண்டாம் திருமண செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.சமந்தா – நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு தெலுங்கு சினிமா ஊடகங்கள் சமந்தாவை பற்றி மிக மோசமாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது. குறிப்பாக நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்து கொண்ட போதும் இந்த விமர்சனங்கள் எழுந்து வந்தது.

சமந்தா மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். பல்லாவரத்தில் மிகச்சிறந்த எளிய சினிமா பின் பலம் எதுவும் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் அவர் நாகார்ஜுனா வீட்டு மருமகள் ஆவது என்பது பெரிய விஷயமாக அப்போது பார்க்கப்பட்டது. மேலும், சமந்தா நாக சைதன்யாவின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட பேசிப்பட்டது.

அப்போது சமந்தாவின் வீடுகளை கூட படம் பிடித்து இங்கு வளர்ந்தவங்க தான் இன்னைக்கு ராஜ பரம்பரையில் வாழ ஆசைப்படுறாங்க என்றெல்லாம் பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்கள். “மஞ்சப்பை எடுத்துக்கிட்டு பல்லவரத்து சந்தையில் காய்கறி வாங்க போயிருப்பாங்க இன்னிக்கு அவங்களுக்கு வந்திருக்கும் வாழ்வை பாருங்கள்” என்றெல்லாம் கூட ஏசி தள்ளினார்கள்.

ஆனால், சமந்தா தன் வீட்டு மருமகள் ஆக வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தவர் நாகார்ஜுனா தான். ஏனென்றால் கட்டினால் நான் சமந்தாவை தான் மனைவியாக கட்டுவேன் என மகன் நாக சைதன்யா கூறியதால் தன்னுடைய மகனின் ஆசையை நாகார்ஜுனா மட்டும்தான் நிறைவேற்றி வைத்தார். அந்த வாரிசு குடும்பத்தில் சமந்தா மருமகள் ஆவது அக்குடும்பத்தில் வேறு யாருமே விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?