மாவு அரைக்க வந்த விஜயமாலா.. 12 நாட்களில் ‘சில்க்’ ஆனது எப்படி? சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்த தினம் இன்று!!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2022, 3:29 pm
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு வசீகரமான முகம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க்.
இவருடைய இயற்பெயர் விஜய மாலா. இவர் சினிமா துறையில் 1970களில் ஒப்பனைக் கலைஞராக தான் தன் வாழ்க்கையை தொடங்கினார். பின் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியின் ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நடிகையாக சில்க் அறிமுகமானார். இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதனால் தான் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது. இதனை தொடர்ந்து இவர் சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார்.
மேலும், 17 ரஜினி, கமல், பிரபு, விஜய்காந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதோடு இப்படி ஒரு நடிகையும் இருப்பாரா! என்று அன்றைய கால பிரபலங்களும், மக்களும் விரும்பி வியந்து பார்க்க வைத்த நடிகை சில்க்.
இவர் கவர்ச்சிக்கு பெயர் போனாலும் நடிப்பு, நடனம் என பல திறமைகளை காட்டியவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள்.
நடிப்பை இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பல நடிகைகள் இவருடைய நடிப்பை கண்டு வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
பின் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார்.
இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் உலகை ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இன்று சில்க் ஸ்மிதா உயிருடன் இருந்து இருந்தால் இன்று அவருக்கு 62வது பிறந்த தினம். சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது யார் என்று உங்களுக்கு தெரியுமா ?
மறைந்த பிரபல வில்லன் நடிகர் வினுச்சக்ரவர்த்தி தான். சில்க் ஸ்மிதா குறித்து வினுச்சக்ரவர்த்தி அளித்த ஒரு பேட்டியில் ‘என்னுடைய படத்தயாரிப்பாளர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான நடிகை என்று பல நடிகைகளின் பெயர்களை சொல்லியிருந்தார். ஆனால், எனக்கு அதில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. புதிதாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. அப்போது ஒரு நாள் மாவரைக்கும் மிஷின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன். அவர் சட்டென்று திரும்பிப் பார்க்கும்போது அவருடைய கண் காந்தம் போல் என்னை ஈர்த்தது.
அப்போது அவரிடம் பேசினேன். அவர் என்னுடைய பெயர் விஜய மாலா, ஆந்திராவை சேர்ந்தவர். இங்கு தமிழ்நாட்டிற்கு வந்து 17 நாட்கள் ஆகிறது என்று சொன்னார்.
உடனே நாட்கள் நடிக்கிறியா? என்று கேட்டேன். அதற்கு அவர் நான் எங்கள் ஊரில் திருவிழாக்களில் நடனம் ஆடியிருக்கிறேன். எனக்கு நடனம் ஆடனும் ஆசை இருக்கு என்று சொன்னார்.
பின் அவருக்கு எப்படிப் பேசுவது? எப்படி நடிப்பது? என்று ஒவ்வொன்றையும் கற்று கொடுத்தேன். சில்க்ஸ்மிதாவும் 12 நாட்களில் எல்லாமே கற்று கொண்டார். அப்படிதான் சில்க் ஸ்மிதாவை உருவாக்கினேன்.