ஒரு வேலை சாப்பாட்டுக்கே திண்டாடிய பாலா… சம்பளத்தை தூக்கி கொடுத்த நடிகரின் கழுத்தை பிடித்த கொடூரம்!
Author: Shree8 May 2023, 7:10 pm
தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.
தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் அஜித்தையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆம், பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் தான் முதலில் நடிக்கவிருந்தது. ஆனால், அப்படத்தில் அஜித்தை கொடுமைப்படுத்தியதோடு, அவரை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.

இதனால் தான் அப்படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும், தயாரிப்பாளரிடம் ஏற்பட்ட பிரச்சனை அஜித்திற்கு தலைவலியாக இருந்ததால் எவ்ளோவ் பெரிய ஹிட் அடிச்சாலும் பரவாயில்ல நான் இந்த படத்தில் நடிக்கல என கூறி விலகிவிட்டாராம். இந்த சம்பவத்தை கேட்டு அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாலா இலாயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் சேது. இப்படத்தின் போது இயக்குனர் பாலா பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வேலை சாப்பாட்டிற்கே பெரும் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் நடிகை ராதிகாவிடம் சீரியலில் நடிப்பதற்காக ரூ. 60, 000 சம்பளம் வாங்கிய விக்ரம் அந்த பணத்தில் ரூ. 30,000 தூக்கி கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் பாலாவுக்கு ஏற்பட்ட பணநெருக்கடியை ஒரு நண்பனாக விக்ரம் அவரின் தேவைகளை பூர்த்தி செய்துவந்துள்ளார்.
இதனால் விக்ரம் பாலாவுக்கு இடையில் நல்ல நட்பு உறவு இருந்து வந்துள்ளது. ஆனால் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கிய வர்மா படம் எதிர்பார்த்தது போல் இல்லை என கூறிய விக்ரமை பாலா தகாத வார்த்தையால் சண்டையிட்டாகவும் பின்னர் வம்பு வேண்டாம் என விக்ரம் அவரை விட்டுவிட்டு வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் வேறு படம் இயக்கி வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.