சமூக வலைதளத்தில் நடிகைகள் பதிவிடும் விளம்பரத்திற்கு இவ்வளவு பணமா.? முதலிடத்தில் சமந்தா..?

Author: Rajesh
29 March 2022, 1:58 pm

சமீபகாலமாக நடிகைள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பல்வேறு தயாரிப்புகளை விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். தற்போது தமிழ் முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராய் லட்சுமி, சமந்தா, ஹன்சிகா உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

சமூகவலைத் தளப்பக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு நடிகர், நடிகைகள், சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது, தங்களுடைய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சில நடிகைகள் சிலர் வாங்கும் சம்பளம் பலரையும் அதிர்ச்சியடைச்செய்துள்ளது.

அந்த வகையில், நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் மட்டுமல்லாது தற்போது ஹாலிவுட் அளவிற்கு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இவரை 73.8 பில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதனால் நடிகை பிரியங்கா பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் கிட்டத்தட்ட 1.8 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

டிகை தீபிகா படுகோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 64.1 மில்லியன் பாலோயர்களை கொண்டிருக்கிறார். இதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு முன்னணி நடிகர், நடிகைகள் அவர்கள் வைத்துள்ள பாலோர்களைப் பொறுத்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ் நடிகைகளும் பலர் தங்களது சமூக வலைதளங்களில் விளம்பரங்களை பதிவிட்டு அதிகம் சம்பாதித்து வருவதாக கூறப்படும். அந்த வரிசையில் நடிகை சமந்தா முன்னணியில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விளம்பர பதிவிற்கு இதுவரை 10 லட்சம் வரை பெற்று வந்த சமந்தா இனிமேல் 20லட்சம் ரூபாயாக கேட்க போகிறாராம். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் தற்போது இந்தியிலும் அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளதால் இந்த சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 1384

    1

    1