அந்த அரபிக் குத்து பாடல் எப்போ சார் வரும்? பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோவை கேட்டு ஆடிப் போன் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 6:20 pm

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பாடல் வெளியானது. விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு என பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறிப்பாக அரபிக் குத்து என தொடங்கும் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இந்த பாடலில் கவனிக்ககத்தக்க விஷயம், அரபிக் வார்த்தை என்று கூறி என்ன மொழியை திணித்துள்ளார்கள் என தெரியவில்லை. ஆனால் 5 வார்த்தைகள் மட்டுமே புரிகிறது. மீதி பாடல் வரிகள் புரியவில்லை.

Oh cutie Hey sweety என்ற வார்த்தைகள் மட்டும் புரியும். பின்னர் வந்த வார்த்தைகள் புரியவில்லை. ஆனால் மொத்தம் 10 வரி பாடலை மீண்டும் மீண்டும் சேர்த்து பாடலை கோர்த்துள்ளனர். அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ள இந்த பாடலில் உள்ள நடனம் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஏற்கனவே டாக்டர் படத்தில் டிக் டாக் என்ற பாடலில் வந்த செட் அனைவரையும் கவர்ந்திருந்தது. அது போல இந்த பாடலில் வந்துள்ள செட் அனைவரயும் கவர்ந்தது என்றே சொல்லலாம். எது எப்படியோ விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?