கனகாவின் சோக வாழ்வு… வெந்து வேகாத அரிசி.. சொந்த வீட்டிலே சிறைவாசம்..!

நடிகை கனகா கரகட்டக்காரன் படத்தின் மூலமாக பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவரது தாய் இறந்த பின்னர் எப்படி நிலைகுலைந்து போனார் என்பது பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது பேசி உள்ளார்.

செய்யாறு பாலு பேசும் போது, “கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் கனகாவிற்கு நாலாபுறமும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், கனகாவை அவரது அம்மா தேவிகா தான் அரண் போல இருந்து பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று கனனாவின் அம்மா ஒரு நாள் இறந்து போனதாகவும், கனகாவிற்கு அம்மா தான் பக்கபலமாக எல்லாமே. தேவிகாவின் மரணம் கனகாவை நிலைகுலைய செய்து விட்டதாகவும், கமிட் பண்ண படங்களுக்கு அவரால் சரியாக செல்ல முடியவில்லை என்றும், எந்த விஷயத்திலும் கனகாவால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. வீட்டிலேயே கனகா முடங்கி விட்டதாகவும், மீண்டும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கனகாவிற்கு வாய்ப்புக்கொடுத்து நடிக்க வைக்கிறார்கள்.

இருப்பினும் தாயாரின் நினைவிலிருந்து கனகாவால் மீண்டு வர முடியவில்லை என்பதால், திடீரென்று கனகா ஒரு நாள் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தன்னுடைய கணவர் பெயர் புருஷோத்தமன் என்றும் அவர் நியூயார்க்கில் இருப்பதாகவும் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உடனே பத்திரிகையாளர்கள் கணவரின் புகைப்படத்தை கேட்ட நிலையில், புகைப்படம் தர முடியாது என்று கனகா தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் கனகா கூறியது முற்றிலும் பொய் என்பது தெரிய வந்தது. கனகா ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றும், தன்னை யாரும் நெருங்கி விடக்கூடாது என்பதற்காக அவர் அப்படி சொன்னாரா? இல்லை தன் பாதுகாப்பிற்காக ஒரு ஆள் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக அப்படி சொன்னாரா என்பது தெரியவில்லை என பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

மேலும், கனகாவின் வீட்டில் சொத்து தகராறு என்றும் கனகா வீட்டின் ஒரு பகுதி எரிந்து விட்டதாகவும் செய்தி வெளிய சமயத்தில், இதை தெரிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அங்கு சென்ற போது, அவரது வீட்டில் உள்ளே சென்று பார்த்த பொழுது வெந்து வேகாத அரிசி என வீடே அலங்கோலமாக கிடந்தது என்றும், அப்போது கோபமடைந்த கனகா உங்களை யார் இங்கெல்லாம் வரச் சொன்னது என்று கடிந்து கொண்டாராம்.

இதனிடையே, தேவிகா உதவிய தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய மகனை கனகாவுக்கு உதவியாளராக அனுப்பி வைத்ததாகவும், அவர் கனகாவுக்கு எல்லாமுமாய் இருந்து கிட்டத்தட்ட பழைய கனகாவை மீண்டும் கொண்டு வருவதற்கு அவர் முயற்சி செய்த நிலையில் தான் கனகாவின் மீது உதவியாளருக்கு காதல் முளைத்தது.

இதனிடையே, கனகாவிற்கு உதவியாளர் தன்னை தவறாக நடத்த முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகத்தில், அவரை அழைத்து கண்டித்ததோடு, காவல் நிலையத்தில் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டினார். இந்த நிலையில் அந்த உதவியாளர் கனகாவிடமிருந்து சென்று விட்டார். சில காலங்களுக்கு பிறகு அந்த உதவியாளர் தன்னை உண்மையாக காதலித்ததை கனகா புரிந்து கொண்டார். அம்மாவின் இறப்போடு, இந்த குற்ற உணர்வும் கனகாவை மிகவும் பாதித்து மீண்டும் நிலைகுலைந்து போனார். மீண்டும் வீட்டுக்குள்ளேயே தன்னை சிறை வைத்து இருந்து கொண்டார்.” என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலுதெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

8 seconds ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

This website uses cookies.