படப்பிடிப்பில் இயக்குனர் என்னை நடத்திய விதம் பிடிக்கவில்லை..!மனம் திறந்த சாய் பல்லவி..!
Author: Selvan7 November 2024, 2:15 pm
NGK இயக்குனர் பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்தார் நடிகை சாய் பல்லவி.
சாய் பல்லவி நடிப்பில் வெளி வந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கோடிகளில் புரள்கிறது.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சாய் பல்லவி நடித்திருந்தார். உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் மக்கள் சாய் பல்லவியை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: மீண்டும் இணைகிறார்களா பிரபல காதல் ஜோடி…அமரன் படம் கொடுத்த வாய்ப்பு…!
சமீபத்தில் சாய் பல்லவி பேட்டி ஒன்றில் NGK படப்பிடிப்பின் நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் NGK. இத்திரைப்படத்தில் தான் செல்வராகவன் முதன் முதலில் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிந்தார். படத்தின் ஹீரோயினி ஆக சாய் பல்லவி நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் நடித்த போது எனக்கு அருவருப்பான மனநிலை இருந்தது என்றும் படத்தை விட்டு விலகி விடலாம் என்றெல்லாம் தோன்றியது என கூறியிருக்கிறார்.
பொதுவாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கும் போது இயக்குனர்கள் நிறை குறைகளை சொல்லுவார்கள் அல்லது பாராட்டுவார்கள். ஆனால் இயக்குனர் செல்வராகவன் காட்சி முடிந்த பிறகு எந்த வித பதிலும் சொல்லாமல் கிளம்பி விடுவார்.
படப்பிடிப்பை விட்டு கிளம்பி சென்றுவிடலாம் என்று ஒரு நாள் நினைக்கும் போது நடிகர் தனுஷ் படப்பிடிப்பு எப்படி போது என்று கேட்டார். அவரிடம் என்னுடைய மனநிலையை எடுத்து சொன்னேன்.
அதற்கு தனுஷ் என் அண்ணன் எப்போதுமே அப்படி தான் அவர் நாம் நன்றாக நடிக்கிறோமா இல்லையா என்று உன்னிப்பாக கவனிப்பார். நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல் நன்றாக நடியுங்கள் என ஆறுதல் சொன்னார்.
நடிகர் சூர்யாவும் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார்.
அதனால் தான் என்னால் NGK படத்தில் முழுமையாக நடிக்க முடிந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.