காரில் இருந்து விழுந்த பிரபல இளம் ஹாலிவுட் நடிகர்.. ஒரு வாரம் கழித்து பிரிந்த உயிர்!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2024, 5:21 pm

மலைப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த இளம் நடிகர் தவறி விழுந்து படுகாகயமடைந்த நிலையில் சிகிச்சை பலனிற்னி உயிரிழந்தார்.

2014-ஆம் ஆண்டு “தி சாண்டா கான்” என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய ஹட்சன் மீக், “MacGyver” மற்றும் “Legasis” போன்ற பல பிரபல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

Hudson Meek Passed away at the age of 16

அதன் பின்னர், 2017-ஆம் ஆண்டு “பேபி டிரைவர்” என்ற படத்தில் ஆன்சல் எல்கார்ட்டின் “பேபி” கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

இதையும் படியுங்க: இனி பார்ட்-2 படமே வேண்டாம்…கதி கலங்கிய தியேட்டர் ஓனர்கள்..!

கால்பந்தில் ஆர்வமுற்ற அவர், பள்ளியில் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பல சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

16வது பிறந்த நாளுக்குப் பிறகு, ஹட்சன் மீக், டிசம்பர் 16-ஆம் தேதி வெஸ்டாவியா ஹில்ஸ் பகுதியில் இருந்து அலபாமா நோக்கி காரில் சென்றபோது, காரில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதன் பின்னர், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு அவரது ரசிகர்களை தீவிர சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Hudson meek Passed Away

அவரது பெற்றோர், மீக்கின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிவசப்பட்ட தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “இன்றிரவு இயேசுவுடன் இணைந்தார். எங்கள் இதயங்களை உடைத்துவிட்டார். இந்த பூமியில் அவர் வாழ்ந்த 16 ஆண்டுகள் குறைவாக இருந்தாலும், அவர் நிறைய சாதனைகளை செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 87

    0

    0

    Leave a Reply